10/4/14

அவ்வையும் பாரதியும்!



அவ்வையார் ஆத்திசூடி எழுதினார்.
பாரதி புதிய ஆத்திசூடி எழுதினார்.
அவ்வையார் ஆறுவது சினம் என்றார்.
பாரதி ரௌத்திரம் பழகு என்றார்.
ஏன்?

8/4/14

எதிரொலி!



சிறந்ததை கொடுத்தால் சிறந்ததே கிடைக்கும்
சிறுவன் ஒருவன் பள்ளத்தாக்குக்கு அருகில் வாழ்ந்து வந்தான். ஏதாவது ஓசை எழுப்பும்போது பள்ளத்தாக்குக்கு எதிர்புறம் இருந்து வரும் எதிரொலியை கேட்டு எதிர்புறம் தன்னைப் போல் ஒரு சிறுவன் இருப்பதாக எண்ணினான். அவன் சொல்வதை எதிரொலியாக திரும்ப கேட்டு தனக்கு ஒரு நண்பன் இருப்பதாக நினைத்தான். ஒரு முறை கோபத்தில் ‘’நான் உன்னை வெறுக்கிறேன்’’ என்று கூற எதிரொலியாக அதையே கேட்டான். உடனே மனம் வருந்தி தன தாயிடம் வந்து கூறினான். தாய் அவனை சமாதானப்படுத்தி உன் கோபத்தை விட்டுவிட்டு அன்புடன் ‘’உன்னை விரும்புகிறேன்’’ என்று கூறு என்று அறிவுறுத்தினாள். சிறுவனும் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு பள்ளத்தாக்குக்கு சென்று ‘’நான் உன்னை விரும்புகிறேன்’’ என்று சொல்ல உடனே எதிரொலியாக அதையே திரும்ப கேட்டதும் நண்பன் கிடைத்து விட்டான் என்று மகிழ்ந்து போனான்.

ஒருவனின் மனமும் அந்த பள்ளத்தாக்கு போன்றதே. ஒருவன் என்ன நினைக் கிறானோ அதுவே திரும்ப திரும்ப எழும்பி மனதில் ஆழமான எண்ணப்பதிவை உண்டாக்கும். ஆகவே எப்பொழுதும் தூய எண்ணத்தையே மனதில் கொள்ளவேண்டும். இறைவனை நினைப்பதை தவிர தூய்மையான எண்ணம் வேறு ஒன்று இருக்க முடியுமா? நாள் முழுவதும் இறைவனை நினைப்பதற்கு சுலபமான வழி அவன் நாமத்தை ஜபம் செய்வதே ஆகும்.

5/4/14

மன்னனும் அவ்வையும்!

ஒரு நாள் ஒரு மன்னனும் அவ்வையாரும் கடற்கரையில் கடல் அலை காலை நனைக்குமாறு நடந்து கொண்டிருந்தனர்.

மன்னனுக்கு அவ்வையாரை மட்டம தட்ட ஆசை எழுந்தது.

அவரிடம் கேட்டான்”நீர் வந்து காலில் விழலாமா?’ என்று

அவனுக்கு மிகப் பெருமை,அவ்வையை மடக்கி விட்டோம் என.

அவ்வையார் சொன்னார்”நீரே வந்து காலில் விழுந்தால் நான் என்ன செய்ய?” என்று.

மன்னன் வெட்கித் தலை குனிந்தான்.

புலவர்களிடம் விளையாடலாமா?!

புதுமுகம்

கொட்டிக்கிடக்கும் தமிழ்ப் பதிவுகளென்னும் முத்துக்களின் நடுவே நானும் ஒரு புதிய வலைப்பூவைக் கொணர்ந்து சேர்க்கிறேன் இன்று.
அவாவினால் உந்தப்பட்டு நான் எடுத்திருக்கும் ஒரு முயற்சி.
என் தகுதிகள் பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை.
நாமும் ஒரு பதிவராக வேண்டும் என்ற ஒரு அவா மட்டுமே.
இயன்ற வரை முயன்று பார்ப்பேன்,நல்ல பதிவுகளாக அளிப்பதற்கு.

இங்கு அரசியல் இருக்காது.
நகைச்சுவைத் துணுக்குகளிருக்காது
பதிவுலக மொழியில் வெறும் மொக்கை இருக்காது.
பின் என்னதான் இருக்கும்.
எனக்கே தெரியவில்லை!
பொறுத்திருந்து பார்க்கலாம்!
உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கும்
குப்பு சுந்தரம்