7/6/14

மயிர் மகாத்மியம்!



”என்னடா? நீ நினைத்தது நடக்கவில்லை போலிருக்கிறதே.வருந்துகிறேன்”என்றேன் நண்பனிடம்.

அவன் அலட்சியமாகப் பதில் சொன்னான்”மயிரே போச்சு”

அந்தப் பதில் என்னை யோசிக்க வைத்த்து.

எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டான்.

அது என்ன சாமானியமான விசயமா?

மயிர் போனால் ஒரு சங்கடமும் இல்லையா?

தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்த்திருக்கிறோமே!

தலையிலிருந்து சீப்பை எடுத்துப் பார்க்கும்போது  அதில் நிறைய முடி இருப்பதைப் பார்த்துக் கவலைப் படுவார்கள்—ஆணும் பெண்ணும்.

அதை நிறுத்துவதற்கான வழிமுறைகளை யோசிப்பார்கள்.

இந்துலேகா,எர்வாமேடின் என்றெல்லாம் பல தைலங்கள்.

எவ்வளவு பணமும் நேரமும் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருப்பார்கள், முடியைக் காக்க!

அப்படிப்பட்ட  முடியை எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டான்!!

ஆனால் தலையில் இருக்கும் வரைதான் மயிருக்கு மதிப்பு.

அதற்குத் தைலங்கள்.ஷாம்பூ,என்றெல்லாம் எத்தனை உபசாரங்கள்?

ஆனால் கீழே விழுந்து விட்டால்?

அதற்கு ஒரு மதிப்பும் இல்லை.

அது போலத்தான் தம் நிலையிலிருந்து தாழ்ந்து போகும் மனிதர்களும்.அதைத்தான் அய்யன் வள்ளுவர் சொல்கிறார்………….

“தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்  
நிலையின் இழிந்தக் கடை.

பலர் மயிர் என்ற் சொல் ஒரு தரக்குறைவான சொல் என நினைக்கிறார்கள்.

அவ்வாறாயின் வள்ளுவர் அச்சொல்லை மானம் என்ற அதிகாரத்தில்,ஒரு முறையல்ல,இரு முறை பயன்படுத்தியிருப்பாரா?!

11 கருத்துகள்:

  1. சரிதான்... எர்வாமேட்டின் போன்ற விஷயங்களைப் பயன்படுத்திய அனுபவம் இல்லை உங்களுக்கு என்பது புரிகிறது. உண்மையில் மயிர் இழிவான விஷயம் அல்ல. அதை இழந்தால் முகத்தின் அழகு குன்றிவிடும் என்பதால்தான் இறைவனுக்கு அழகையே இழக்க சம்மதிக்கிறோம் என்பதைத் தெரிவிக்கும் வகையில் முடி காணிக்கை தரும் வழக்கமே வந்தது
    ‘உயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    மயிர்நீப்பர் மானம் வரின்’
    அப்படின்னு வள்ளுவரே சொல்லியிருக்காரே.... அச்சச்சோ... மேற்படி குறள்ல உ, ம ரெண்டும் இடம் மாறிடுச்சு. மாத்திப் படிக்கவும். ஹி... ஹி... ஹி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் என் தளத்துக்கு வருகை தந்து பெருமைப் படுத்தி விட்டீர்கள்.ஒரு சின்னப் பின்னூட்டத்தில் கூட நகைச்சுவை இழையோட விட உங்களால் மட்டுமே முடியும்.
      நன்றி சார்

      நீக்கு
  2. இருக்கும் இடத்தில் இருந்தால்தான் எல்லாத்துக்கும் மரியாதை! வள்ளுவர் குறள் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் இணைத்துக் கொண்டமைக்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  3. மயிரை வைத்துதத்தான் பலர் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முடி என்று சொல்லும்போது இழிவாக கருதாத நாம் மயிர் என்று சொல்லும்போது ஏன் கோபப் படுகிறோமோ?
    பாலகணேஷ் அவர்களின் விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான கேள்வி சார்.
      இன்ரு ஒரு பொன்னாள்.புதியவனின் பதிவுக்குப் பிரபல்ங்கள் வருகை!
      நன்றி
      (யாருமே ஓட்டுப் போடலையே?!)

      நீக்கு
    2. பகிர்வை படிச்சு ரசிச்ச சுவாரஸ்யத்துல மறந்திருப்பாங்க. ஹி.. ஹி... நான் என் பங்கை இப்ப போட்டுர்றேன். ஆனாலும் ஒரு சின்ன அட்வைஸ்... நிறையப் பேர் படிக்கணும்கறத மட்டும் குறிக்கோளா வெக்கறது நல்லது. ஓட்டு தானா வந்தா வரட்டும். எதிர்பார்க்காதீஙக ப்ளிஸ்....

      நீக்கு
    3. புதியவனின் ஆர்வக்கோளாறு!
      நினைவில் கொள்கிறேன்.
      ஆனா நீங்க ஓட்டுப்போட மறக்கவே மறக்காதீங்க சார்.

      நீக்கு
  4. எர்வாமோட்டினில் தொடங்கி வள்ளுவரின் குரளோடு கொண்டுபோய் இணைத்தது அருமை. வாழ்த்துக்கள் நண்பரே...
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் நண்பரே, தங்கள் தளத்துக்கு எனது முதல் வருகை...

    தொலைகாட்சி விளம்பரங்கள் பெரும்பாலும் முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சுற்றியே இருக்கும், அதன் பின்னர் குளியல் சோப். நாம் இந்த பாழாய்ப் போன முடிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

    கேரளாவில் போய் மயிரு என்று சொல்லிவிடாதீர்கள், அடிக்க வருவார்கள் :)

    பதிலளிநீக்கு