10/4/14

அவ்வையும் பாரதியும்!



அவ்வையார் ஆத்திசூடி எழுதினார்.
பாரதி புதிய ஆத்திசூடி எழுதினார்.
அவ்வையார் ஆறுவது சினம் என்றார்.
பாரதி ரௌத்திரம் பழகு என்றார்.
ஏன்?

பாரதி வாழ்ந்த காலம் அத்தகையது.
அந்நிய ஆட்சியில் அடிமைப்பட்டு மக்கள் அஞ்சிக் கிடந்த காலம்.
எனவேதான் மனம் வருந்திப் பாடுகிறார்...
“அஞ்சி அஞ்சிச் சாவார் இவர்
அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே”
எனவேதான் பாப்பாவுக்கும் சொன்னார்”மோதி மிதித்துவிடு பாப்பா,அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா” என்று
எப்போது சினம் வேண்டுமே அப்போது அது அவசியம்.
இன்னோர் வரி...
அவ்வை சொன்னார்...”ஙப்போல் வளை”
ங வர்க்கத்தில்  அந்த ஒரு எழுத்தைத் தவிர மற்றவற்றால் பயனில்லை.
ஆயினும் வர்க்கம் முழுவதையும் தாங்குகிறது.
அது போல் உறவினரை ஆதரிக்க வேண்டும் என்பதே கருத்து.
பாரதி சொல்கிறார்....
“கிளை பல தாங்கேல்”
இதற்கும் கால மாற்றமே காரணம்.
ஒருவர் ஊதியத்தில் பலர் உண்டு கொழுப்பது என்பது காலத்துக்குப் பொருந்தாது ;எனவே அவ்வாறு சொன்னர்.
தான் வாழும் காலத்துக்கேற்ற கருத்துக்களையே சொல்வர் கவிஞர் .

2 கருத்துகள்:

  1. நண்பர் பாண்டியன் மூலமாகத் தங்களின் பதிவைப் பற்றி அறிந்தேன். தங்களது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு
  2. நல்ல விளக்கம்! நன்றி!
    உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளது! சென்று பார்க்கவும்! http://blogintamil.blogspot.in/2014/06/blog-post_29.html

    பதிலளிநீக்கு