10/6/14

கால்பந்து .

குப்பு அந்தப் பள்ளிக்கூடத்தில் உடற் பயிற்சி ஆசிரியராகச் சேர்ந்தான்.

மாணவர்கள் விளையாட்டு நேரத்தில் மைதானத்தில்  விளையாடுவதைப் பார்வையிட்டுக் கொண்டே வந்தான்.

பல மாணவர்கள் பந்தை உதைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஆனால் ஒரு மாணவன் அவர்களுடன் சேராமல் தனியாக நின்று கொண்டு அவர்கள் ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்,

குப்பு அவனிடம் சென்றான்.

“நீயும் அவர்களுடன் சேர்ந்து கொள்வதுதானே/?” என்றான்

மாணவன் சொன்னான்”நான் இங்குதான் இருக்க வேண்டும்”

”ஏன்”என்றான் குப்பு.

”ஏனென்றால் நான்தான் கோல் கீப்பர்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக