9/6/14

நீ வராத இரவு!



படுக்கையில் படுத்தபடி உனக்காகக் காத்திருக்கிறேன்.

உன் வருகையை எதிர்நோக்கி விழித்திருக்கிறேன்.

இன்று ஏன் இந்தத் தாமதம்?

என்னைக் காக்க வைக்காமல் தினம் வரும் நீ இன்று ஏன் காலங்கடத்துகிறாய்?.

கடிகாரத்தைப் பார்க்கிறேன்,

மணி 10.40.

படுத்து 40 மணித்துளிகள் கடந்து விட்டன.

இன்னும் நீ வரவில்லை.மல்லாந்து ,குப்புற,ஒருக்களித்து..இடப்பக்கம்,வலப்பக்கம் என்று…..எல்லா விதமும் படுத்தாகி விட்டது.

நேரம் நகர்ந்தது;ஆனால் நீ வரவில்லை.

எழுந்து ஹாலுக்குப் போகலாமா.

இந்தக் காத்திருப்பு எப்போது முடியப்போகிறது.

ஒரு கொட்டாவி!

கண்கள் கனப்பது போல் இருக்கிறது.

இமைகள் மெல்ல மெல்ல மூடுகின்றன.

வந்து விட்டாய்.

என்னைத் தழுவிக்கொள்கிறாய்..

நித்திரைப் பெண்ணே!

1 கருத்து:

  1. முதலிரண்டு வரிகளிலேயே யாருடைய வருகையை நீர் எதிர்பார்த்தீர் என்பது புரிந்து விட்டாலும் படிக்கும் சுவாரஸ்யம் குறையவில்லை. ஓ.கே.

    பதிலளிநீக்கு