8/6/14

இன்றைய சிந்தனை!

ஒன்று பழக்கமாகி விட்டால் அதை விடுவது கடினம்.

நமக்கெல்லாம் சிறு வயது முதலே காபிப்பழக்கம் ஏற்பட்டு விடுகிறது;சாகும் வரை தொடர்கிறது.

ஆங்கிலத்தில் பழக்கத்தை விடுவது கடினம் என்பதை அழகாகச் சொல்வார்கள்

habit!
cut off h; a bit remains!
cut off a; bit remains!
cut off b;it remains!

கெட்ட பழக்கங்கள் இரயில் நட்பு போல் அறிமுகமாகின்றன.
அழையா விருந்தினர்கள் போல் உள் நுழைகின்றன.
எசமான் போல் அதிகாரம் செய்யத்துவங்குகின்றன.
ஒரு கொடுங்கோலனாய் மாறி ஆக்கிரமித்து நம்மைக் கொடுமைப்படுத்துகின்றன.
கடைசியில் கூற்றுவனாய் மாறி விடுகின்றன.

எனவே எந்தக் கெடுதியான செயலையும்,ஒரு முறைதானே என வர அனுமதித்தால்,அது நமக்கு அடிமையாக இருக்காது.

நாம் அதன் அடிமையாகி விடுவோம்

இது இந்த வார இறுதிக்கான சிந்தனை!



6 கருத்துகள்:

  1. மன உறுதியும் திட சித்தமும் இருந்தால் எதற்கும் நாம் அடிமையாக மாட்டோம் பிரதர். நான் மிகமிக விரும்புகிற விஷயங்களைத் துறந்து பல நாட்கள் இருந்து பார்தது இதைச் சோதனை செய்வதுண்டு அடிக்கடி. (இந்த லிஸ்ட்ல ஒய்ஃபும் உணடான்னு யாருய்யா குரல் கொடுக்கறது... பிச்சுப்புடுவேன் பிச்சு...)
    அதுபோகட்டும்... உங்களின் வார இறுதிச் சிந்தனை நல்லா இருந்துச்சு. Habit க்கான விளக்கம் தந்திருப்பது ரொம்பவே ரசிக்க வெச்சது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரும்புகிற விஷய லிஸ்ட்ல மனைவி எப்படி இருக்க முடியும்?!
      நன்றி சார்

      நீக்கு
  2. அலலாம் போட்டாச்சு... போட்டாச்சு....

    பதிலளிநீக்கு