8/4/14

எதிரொலி!



சிறந்ததை கொடுத்தால் சிறந்ததே கிடைக்கும்
சிறுவன் ஒருவன் பள்ளத்தாக்குக்கு அருகில் வாழ்ந்து வந்தான். ஏதாவது ஓசை எழுப்பும்போது பள்ளத்தாக்குக்கு எதிர்புறம் இருந்து வரும் எதிரொலியை கேட்டு எதிர்புறம் தன்னைப் போல் ஒரு சிறுவன் இருப்பதாக எண்ணினான். அவன் சொல்வதை எதிரொலியாக திரும்ப கேட்டு தனக்கு ஒரு நண்பன் இருப்பதாக நினைத்தான். ஒரு முறை கோபத்தில் ‘’நான் உன்னை வெறுக்கிறேன்’’ என்று கூற எதிரொலியாக அதையே கேட்டான். உடனே மனம் வருந்தி தன தாயிடம் வந்து கூறினான். தாய் அவனை சமாதானப்படுத்தி உன் கோபத்தை விட்டுவிட்டு அன்புடன் ‘’உன்னை விரும்புகிறேன்’’ என்று கூறு என்று அறிவுறுத்தினாள். சிறுவனும் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு பள்ளத்தாக்குக்கு சென்று ‘’நான் உன்னை விரும்புகிறேன்’’ என்று சொல்ல உடனே எதிரொலியாக அதையே திரும்ப கேட்டதும் நண்பன் கிடைத்து விட்டான் என்று மகிழ்ந்து போனான்.

ஒருவனின் மனமும் அந்த பள்ளத்தாக்கு போன்றதே. ஒருவன் என்ன நினைக் கிறானோ அதுவே திரும்ப திரும்ப எழும்பி மனதில் ஆழமான எண்ணப்பதிவை உண்டாக்கும். ஆகவே எப்பொழுதும் தூய எண்ணத்தையே மனதில் கொள்ளவேண்டும். இறைவனை நினைப்பதை தவிர தூய்மையான எண்ணம் வேறு ஒன்று இருக்க முடியுமா? நாள் முழுவதும் இறைவனை நினைப்பதற்கு சுலபமான வழி அவன் நாமத்தை ஜபம் செய்வதே ஆகும்.

2 கருத்துகள்: